புகழாரம்! தமிழ் இதயத்துடிப்பாய் என்றும் வாழும் முத்தமிழ் கலைஞர்...! - உதயநிதி 
                                    
                                    
                                   Tamil heartthrob who will always live on Udhayanidhi
 
                                 
                               
                                
                                      
                                            இன்று மறைந்த திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
-fvgrm.jpeg)
மேலும் இந்த நாளை கருணாநிதியின் தமிழ்ப்பற்றின் பெயரில் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா தொண்டர்களால் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும்,கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்:
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பக்கத்தின் பதிவில் தெரிவித்திருந்ததாவது, "தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம், 2026-லும் வென்று கழக ஆட்சி தொடர உறுதியேற்போம்! " என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பெருமையை உரைக்கச் சொல்லும் வகையில் இந்த செம்மொழி விழா இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Tamil heartthrob who will always live on Udhayanidhi