திருமாவளவனுடன் பாஜக கூட்டு சதி.. தடா பெரியசாமியின் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக பட்டியலின அணியின் மாநிலத் தலைவர் தடா பெரியசாமி இன்று காலை கட்சியிலிருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். 

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவனுக்கு எதிராக தடா பெரியசாமி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக கார்த்தியாயினி என்ற பெண்வாய்ப்பாளர் களம் இறக்கப்பட்டார். 

இதனால் அதிர்ச்சியில் இருந்த தடா பெரியசாமி இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இனி தொடர்ந்து சென்னை பசுமைவழிச் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த தடா பெரியசாமி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

குறிப்பாக வேலூரைச் சேர்ந்த கார்த்தியாயினி என்ற பெண்ணை திட்டமிட்டு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தி உள்ளனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த எண்ணெய் நிறுத்தாமல் ஏதோ ஒரு பெண்ணை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். 

நான் பட்டியலின அணியின் மாநில தலைவராக இருக்கும் என்னிடம் எதுவும் ஆலோசனை நடத்தாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன் தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவிநாயகம் ஆகியோர் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர். 

இவர்கள் மூன்று பேரும் போட்ட திட்டம் தான் இது. இவர்கள் மூன்று பேரும் தான் கட்சியா? தமிழக பாஜகவில் மாநில நிர்வாகிகள் என்ற பெயரில் ஆளுக்கு ஒரு சீட் என பிரித்துக் கொண்டனர். யார் எங்கு வேண்டுமானாலும் நிற்பாட்டலாம் என்ற எண்ணத்திற்கு வந்து வட்டனர்.

திருவள்ளூர் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த பொன் பாலகணபதியை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். ஆனால் தொகுதியில் பறையர் சமூகத்தினரை அதிகமாக உள்ளனர். சாதனத்தை ஒழிப்பேன் பேசியவர், பிரதமர் மோடியை ஒருமையில் பேசியவர் திருமாவளவன். 

அவருக்கு எதிராக சிதம்பரத்தில் களத்தில் வேலை செய்த என்னை ஆலோசிக்காமல் ஒரு பெண்ணை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இதற்கு காரணம் திருமாவளவன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் எல் முருகன் கேசவ விநாயகம் ஆகியோரை தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதால் பெண் வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். திருமாவளவனிடம் பாஜகவை இந்த 3 பேரும் அடகு வைத்து விட்டனர்" என குற்றம் சாட்டுகிறேன். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tada perriyasami allegations on BJP annamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->