தீயணைப்புத்துறைத் தலைவர் பதவியைத் துறந்தார் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ்...! இந்த திடீர் முடிவு பின்னணி என்ன...? - Seithipunal
Seithipunal


தமிழக நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆணையத்தின் தலைவராக செயல்பட்டு வந்த சங்கர் ஜிவால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழகத்தின் காவல்துறை தலைமை இயக்குநராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார்.

அவரது பணிக்காலம் 2025 ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஓய்வுபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்பாகவே அப்போதைய அரசு அவருக்கு புதிய பொறுப்பை வழங்கியது.அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆணையத்தின் தலைவராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.

காவல்துறை ஆணையத்தின் மாதிரியில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் செயல்படத் தொடங்கியது.

2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட சங்கர் ஜிவால், சுமார் 10 மாதங்களாக அந்தப் பொறுப்பை வகித்து வந்த நிலையில், தற்போது திடீரென தனது பதவியை விலகியுள்ளார்.

அவருடன் ஆணைய உறுப்பினர்களாக பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி, நமச்சிவாயம் மற்றும் இக்ராம் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகத்தில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கும் மேலான காலம் கடந்த நிலையில் சங்கர் ஜிவாலின் இந்த திடீர் முடிவு நிர்வாக வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த ராஜினாமாவுக்கான பின்னணி காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பல்வேறு யூகங்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shankar Jiwal IPS resigns Fire Service Chief What background this sudden decision


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->