டி20 வெற்றி இந்தியாவின் வலிமை…! - கமல் ஹாசன் பெருமை பதிவு...!
T20 victory India strength Kamal Haasan proud record
டி20 உலகக்கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உலக கிரிக்கெட்டில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த பெருமைமிகு கோப்பையை கைப்பற்றிய இந்திய வீரர்களுக்கு நாடு முழுவதும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், விளையாட்டு ஜாம்பவான்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் இந்திய அணியை வாழ்த்தி வருகின்றனர்.இந்த நிலையில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நடிகரும் மக்களவை உறுப்பினருமான கமல் ஹாசனும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது X (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்திய கிரிக்கெட்டின் வலிமையை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.அந்த பதிவில் அவர், “எங்கள் ஆண்கள் அணி தொடர்ச்சியாக ஐ.சி.சி. ஆண்கள் டி20 உலகக்கோப்பையை வென்று சாம்பியன்களாக மிளிர்கிறது.
அதேசமயம், ஆண்கள் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்ததுடன், மகளிர் ஐ.சி.சி. உலகக்கோப்பையிலும் இந்திய பெண்கள் அணி சாம்பியன்களாக உயர்ந்துள்ளது.
இது இந்திய கிரிக்கெட்டின் வலிமையான அடித்தளத்தை வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ரஞ்சி டிராபி முதல் ஐபிஎல் வரை பரவியுள்ள இந்தியாவின் வலுவான உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பு தான் இந்த வெற்றிகளுக்கான அடிப்படை. இதுபோன்ற உறுதியான அமைப்பு ஒவ்வொரு விளையாட்டிற்கும் இருந்தால் இந்தியா உலக அரங்கில் எத்தனை பெரிய சாதனைகளை படைக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
இந்திய இளைஞர்களின் திறனும் ஆற்றலும் எல்லையற்றது.பள்ளத்தாக்குகளில் தொடங்கும் கனவுகள் பிரமாண்டமான மைதானங்களில் உலக சாம்பியன் வெற்றிகளாக மாறுகின்றன. குழந்தைப் பருவ கனவுகள் முதல் உலக வெற்றிகள் வரை – இந்தியா உயர்ந்து கொண்டே செல்கிறது” என கமல் ஹாசன் பதிவிட்டுள்ளார்.
English Summary
T20 victory India strength Kamal Haasan proud record