அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவா...? எதிர்ப்பா...? - அரசுப் பள்ளி சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்...! - Seithipunal
Seithipunal


விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,செய்தியாளர்களிடம் த.வெ.க. தலைமையிலான கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதாலேயே ஒரு கட்சி கூட்டணியின் அங்கமாகிவிட்டது என்று கருத முடியாது. கூட்டணி அமைப்பு தொடர்பாக முதலமைச்சர் ஆதரவு கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது உண்மை.

இருப்பினும், அந்த ஆலோசனையில் எந்தவித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை" என்றார்.அமைச்சரவையில் பங்கேற்றதற்காக தி.மு.க.வுக்கு துரோகம் செய்ததாக சிலர் விமர்சிப்பது முற்றிலும் தவறானது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்."விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான அரசியல் நட்புறவு தொடர்ந்து நீடித்து வருகிறது.

த.வெ.க. அரசுக்கு ஆதரவு வழங்கும் முடிவு, மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னரே மேற்கொள்ளப்பட்டது. எங்கள் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஒருவர் தி.மு.க.வில் இணைந்தது எங்களுக்கு அதிர்ச்சியளித்த சம்பவமாகும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் கீர்த்தனாவின் பள்ளி ஆய்வு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "இன்றைய சூழலில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளும் ஆய்வுகள் மற்றும் நிகழ்வுகளை 'ரீல்ஸ்' வடிவில் வெளியிடுவது நாடு முழுவதும் பரவலாகி வருகிறது.

ஆனால் அவை பொது ஒழுங்கிற்கோ, நிர்வாகத்தின் கண்ணியத்திற்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தால், அதனை நாங்கள் சுட்டிக்காட்டுவது எங்கள் கடமையாகும்.

அதுபோன்ற விமர்சனங்களை அமைச்சர்கள் நேர்மறையாக ஏற்றுக்கொண்டு தேவையான திருத்தங்களை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Support or opposition Minister Keerthana Thirumavalavan responds government school controversy


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->