தலைமைச் செயலகத்தில் திடீர் பரபரப்பு...! முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார் ப.சிதம்பரம்...!
Sudden uproar at Secretariat P Chidambaram met and spoke Chief Minister Vijay
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெற்றது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நேரில் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடினார். சந்திப்பின் நிறைவில், நினைவுப் பரிசை வழங்கி தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.
சட்டசபைத் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து, மாநில அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் விஸ்வநாதன் உயர்கல்வித்துறை அமைச்சராகவும், ராஜேஷ்குமார் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

இந்த பின்னணியில், ப.சிதம்பரத்தின் இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.இதனிடையே, தென்னிந்திய பிராந்தியங்களுக்கான ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரியும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஒரே நாளில் அரசியல் மற்றும் ராணுவத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முதல்-அமைச்சரை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
English Summary
Sudden uproar at Secretariat P Chidambaram met and spoke Chief Minister Vijay