கடும் கண்டனம்! பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி யின் அனல் பறக்கும் கேள்விகள்...!
Strong condemnation MP Kanimozhis fiery questions in Parliament
நேற்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. இதில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. அவர்கள் தெரிவித்ததாவது,"உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக மத்திய பல்கலைகழகங்களில் அமைக்கப்படும் சம வாய்ப்பு பிரிவுகள் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகள், 2012-ன் படி அமைக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு அமைக்கப்பட்டுஉள்ள பிரிவுகளின் எண்ணிக்கை விவரங்கள் என்ன?

அவை இன்னும் முழுமையாக அமைக்கபடாததற்கான காரணங்கள் என்ன? கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் வன்முறை நிகழ்வுகள் குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? கடந்த 5 ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டும் மத்திய பல்கலைக்கழகங்களில் நடந்த இத்தகைய சம்பவங்களின் விவரங்கள், கல்லூரி வாரியாக, பல்கலைக்கழக வாரியாக வெளியிட வேண்டும்.
பாகுபாட்டை எதிர்கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் அல்லது அரசு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளின் விவரங்கள் என்ன?சாதி அடிப்படையிலான பாகுபாட்டால் எழும் குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் வகுத்துள்ள கூடுதல் வழிமுறைகள் என்ன? என்று வலியுறுத்தி பேசினார்.
தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் தொழில் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள், அதில் வழங்கப்படும் படிப்புகள் மற்றும் சேர்க்கை விவரங்கள் என்ன? ஐடிஐகளில் கிடைக்கும் பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பின் தரத்தை அரசாங்கம் எவ்வாறு மதிப்பீடு செய்கிறது? புதிதாக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசாங்கம் நிறுவ முன்மொழிந்துள்ள ஐ.டி.ஐ.களின் விவரங்கள் என்ன?
பயிற்சி தரங்களை மேம்படுத்த, வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்று அவர் கேட்டுள்ளார்.அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக் குள்ளான துயர் மிகுந்த சம்பவத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன?
பயணிகள் தவிர மற்றவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு எவ்வளவு? இதுவரை ஒன்றிய அரசு ஏதேனும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா?இந்த விபத்திற்கு காரணமாக யாரேனும் தனி நபர் அல்லது ஏதேனும் நிறுவனம் செய்த நாசவேலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதா?இந்த விபத்துக்கு பொறுப்பானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து நிகழாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? " என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Strong condemnation MP Kanimozhis fiery questions in Parliament