திமுகவுக்கு அடுத்த சிக்கல்.!! ED வழக்கில் திமுக எம்.பி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.!!
SpecialCourt ordered to DMK MP Gautama sigamani to appear
செம்மண் குவாரி ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்யமுடியின் மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்பியுமான கவுதம சிகாமணி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு.!!
கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது மகன், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் தொடங்கப்பட்ட செம்மண் குவாரியில் இருந்து அதிக அளவில் மண் எடுத்து அரசுக்கு 28 கோடியே 36 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவருடைய மகன் கவுதம சிதாமணி மற்றும் உறவினர்கள் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில் இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கவுதம சிகாமணி ஆகியோரின் சென்னை மற்றும் கடலூர் வீடு, அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணமும், 41 கோடியை 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான வங்கி முதலீடுகள், தங்க நகைகள் ஆகியவை முடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிறப்பு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து கூடுதல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு என்று நீதிபதி மலர்வாணன் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கூடுதல் நீதிபதி வரும் நவம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பியுமான கவுதம சிகாமணிக்கு உத்தரவு பெற்றுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் நகல்வதை வழங்குவதற்காக வரும் நவம்பர் 24ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
SpecialCourt ordered to DMK MP Gautama sigamani to appear