தமிழக ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு முகாம்! கைரேகை பதிவு செய்யாதவர்கள் உடனே பயன்படுத்திக்கொள்ளலாம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று ரேஷன் கார்டுதாரர்களுக்கான கைவிரல் ரேகைப்பதிவு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைத் தவிர, மாநிலத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் அடிப்படையில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்மார்ட் குடும்ப அட்டையில் பெயர் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளும் கைவிரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீதம் கைவிரல் ரேகை சரிபார்ப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் கைவிரல் ரேகை பதிவையும் 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும். ஆனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறாது.

இதுவரை ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், தங்களது அருகிலுள்ள ரேஷன் கடையில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளுமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Special camp at Tamil Nadu ration shops today Those who havenot registered their fingerprints can avail of this service immediately


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->