எச்சரிக்கை...! சமூக வலைதளங்களில் பொறுப்புணர்ந்து பேசுங்கள்...! - திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர்
Speak responsibly on social media Chief Minister to DMK executives
முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

மேலும், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.இந்நிலையில் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ," சமூக வலைத்தளங்களில் தி.மு.க நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்" என நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக ஸ்டாலின்:
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், " கேமராக்கள் நம்மை சுற்றி இருப்பதை அறிந்து, பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்.திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் அதிகம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நிர்வாகிகளுக்கு தான் உள்ளது.
அதனால், சமூக வலைத்தளங்களில் திமுக நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். முன்வினைப்பயனால் முதலமைச்சர் இப்படி பேசுவது நன்மைப் பயக்கும் என்று பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Speak responsibly on social media Chief Minister to DMK executives