அதிமுக கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றால் ..? அனைவரையும் ஒருங்கிணைத்து பழனிசாமி செயல்பட வேண்டும்; எஸ்.பி.வேலுமணி..!
SP Velumani says Palaniswami should work by uniting everyone
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை சென்றார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
நாங்கள் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் அனைத்து விஷயங்களையும் தெளிவாக கூறியுள்ளோம் என்று குறிப்பிட்டதோடு, கட்சிக்காக உழைத்தவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் இருந்து உழைத்தவர்கள், தற்போதைய பொதுச் செயலாளர் பழனிசாமிக்காக உழைத்தவர்கள் ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

அதனால் தான் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட அனைவரும் எங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் வேண்டாம் என்று கூறி,தொண்டர்களாக தொடர்கின்றோம் என சொல்லி உள்ளதாக தெரிவித்தார். இதை கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றோம் என்றும், நாங்கள் அதிமுக உறுப்பினராகவே தொடர்கின்றோம் என்று தெரிவித்தார்.
அத்துடன், மகளிரணி கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி எப்போதும் அழைப்பு விடுப்பார். ஆனால், நேற்று முன்தினம் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், ஆனால், அதற்கு முன்னரே நாங்கள் கடிதம் கொடுத்து விட்டோம். அதனால் எங்களை அழைக்கவில்லை என நினைப்பதாக கூறினார்.

மேலும், தான் சொன்ன ஜாம்பவான்களுக்கு அர்த்தம் வேறு என்றும், கட்சிக்காக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் உழைத்தவர்கள். பழனிசாமிக்காக களத்தில் உழைத்தவர்கள், கட்சியை வளர்த்தவர்கள் என்ற கருத்தில் சொன்னேன் என்று விளக்கமளித்தார்.
அத்துடன், கடந்த 04-ஆம் தேதி பதவி எல்லாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், கொடுக்கவில்லை. அவர்களிடமே பதில் கேளுங்கள் என்று குறைப்பதோடு, எங்களை பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றோம் என்றும், இன்னும் இந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்றால் அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுச் செயலாளர் பழனிசாமி செயல்பட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டார்.
English Summary
SP Velumani says Palaniswami should work by uniting everyone