திமுக - பாஜக இடையேதான் சுமுக உறவு நிலவுகிறது: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி - Seithipunal
Seithipunal


தவெக மற்றும் பாஜக இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்குத் தமிழக அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். தவெகவிற்கும் பாஜகவிற்கும் எந்தப் பிணைப்பும் இல்லை என்றும், உண்மையில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையேதான் சுமுகமான உறவு நிலவி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆதாரமாக, செந்தில் பாலாஜி உள்ளிட்ட முந்தைய திமுக ஆட்சிக்கால முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கான கோப்புகளுக்குப் பொறுப்பு ஆளுநர் தற்போது வரை ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வருவதைச் சுட்டிக்காட்டினார். ஆளுநரின் இந்தத் தொடர் மௌனமே திமுக மற்றும் பாஜக இடையேயான மறைமுக உறவை அம்பலப்படுத்துவதாக அவர் சாடினார். மேலும், சட்டமன்றத்தில் இருமுறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதில் எந்தவொரு தவறும் மரபு மீறலும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

முதலமைச்சர் விஜய் மக்கள் பிரச்சினைகளில் வாய் திறப்பதில்லை என்ற உதயநிதியின் கண்டனத்திற்குப் பதில் அளித்த அமைச்சர் நிர்மல் குமார், சட்டமன்ற விதிகள் மற்றும் மரபுகளைச் சரியாகத் தெரிந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார். இன்று ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கான நாள் என்பதால் முறைப்படி ஆளுநர் மட்டுமே உரையாற்றினார் என்றும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெறும் விவாதத்தின் போது முதலமைச்சர் விஜய் அவையில் விரிவாகப் பதிலளிப்பார் என்றும் கூறினார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசிய அவர், அங்குமிங்குமாக நடக்கும் குற்றச்சம்பவங்கள் அனைத்தும் தனிப்பட்ட காரணங்களால் நடப்பவையே தவிர, ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அல்ல என்றார். முந்தைய திமுக ஆட்சியைப் போலக் குற்றங்களை மூடி மறைக்கும் வழக்கம் தவெக அரசுக்குக் கிடையாது என்றும், எங்கு தவறு நடந்தாலும் குற்றவாளிகள் மீது உடனுக்குடன் இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் தற்போது ஆங்காங்கே நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்குப் பின்னால் அரசியல் சதி இருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார். திட்டமிட்டுப் பொதுமக்களிடம் புதிய தவெக அரசுக்கு அவப்பெயரை உருவாக்குவதற்காக, திமுகவினரின் தூண்டுதலின் பேரிலேயே பல்வேறு இடங்களில் மின்வெட்டுப் பிரச்சினைகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றார். இருப்பினும், அவ்வாறு மின் தடை ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து, தவெக அரசின் மின்வாரிய ஊழியர்கள் மூலம் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே மின் விநியோகம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Smooth Relations Exist Between DMK and BJP Not TVK Minister Nirmal Kumar Hits Back at Udhayanidhi Stalin


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->