"நீ அரியணை ஏறும் நாள் வரும்" TVK விஜய்க்கு தாய் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!
Shoba wish TVK Vijay Manadu
மதுரையில் வியாழக்கிழமை நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை முன்னிட்டு, கட்சி நிறுவனர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
மாநாடு மதுரை பாரப்பத்தியில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் பெரும் அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 200 ஏக்கரில் மேடை, தொண்டர்களுக்கான அமர்வு இடங்கள், நீண்ட நடைமேடை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 306 ஏக்கர் பரப்பில் வாகன நிறுத்துமிடங்கள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டுத் திடலைச் சுற்றி 200-க்கும் மேற்பட்ட உயர்மின் விளக்குகள், குடிநீர் தொட்டிகள், குழாய்கள் மூலம் நீர் விநியோகம், 100-க்கும் மேற்பட்ட நடமாடும் கழிப்பறைகள் ஆகிய வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காலை முதலே பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மதுரையை நோக்கி வரத்தொடங்கிய நிலையில், மாலை 4 மணிக்குத் திட்டமிடப்பட்டிருந்த மாநாடு முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஷோபா சந்திரசேகர் தனது மகன் விஜய்க்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில், “வெள்ளித்திரையில் உன்னை வெற்றி பெறச்செய்த மக்கள், இப்போது உன் அரசியல் வெற்றிக்கும் துணையாய் நிற்பார்கள். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் உன் இமாலய வெற்றி புலப்படும்.
நீ அரியணை ஏறும் நாள் வரும், அது தொண்டர்களின் திருநாளாகும். தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்பதை நிரூபி. உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் யாருக்கும் இல்லை. உன் வெற்றிக்கு வானமே எல்லை” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Shoba wish TVK Vijay Manadu