திமுகவில் இருந்து திடீரென விலகும் முக்கிய புள்ளி? திமுக நினைத்தது ஒன்று, ஆனால் நடந்தது ஒன்று!கலக்கத்தில் ஸ்டாலின்!!
shimla muthuchozhan says dmk
தி.மு.க ஆட்சியில் பெண் அமைச்சராகவும், திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான சற்குணபாண்டியனின் மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன். சற்குணப்பாண்டியன் ஆர்.கே நகர் தொகுதியில் பலமுறை அ.தி.மு.க.வை தோற்கடித்தவர்.
சற்குணப்பாண்டியன் மரணமடைந்த பிறகு அவரது இடத்தில் அவரது மருமகள் சிம்லா முத்துச்சோழன், ஜெயலலிதாவை ஏதிர்த்து 2016 தேர்தலில் ஆர் கே நகரில் வேட்பாளராக போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் சிம்லா முத்துச்சோழனை, ஜெயலலிதா தோற்கடித்தார். 30 ஆயிரம் ஒட்டு வித்தியாதலில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தனக்கு கண்டிப்பாக வடசென்னையில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்த நிலையில், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதியை திமுக வேட்பாளராக அறிவித்தது. இது சிம்லா முத்துச்சோழனுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தேர்தல் பொறுப்பாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை, அந்த பதவியை மருது கணேஷுக்கு வழங்கப்பட்டது. இதனால் சிம்லா முத்துச்சோழன் திமுகவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கண்டுக்கொள்ளாதபட்சத்தில், அவர் வெளியேறி வேறுகட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
shimla muthuchozhan says dmk