நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
serial that gave life to all of us Chennai is 386 years old Chief Minister MK Stalin
இன்று சென்னை மாநகரம் தனது 386-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதில் குறிப்பிட்டதாவது,"எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் #சென்னை! என்று தெரிவித்துள்ளார்.மேலும், மக்கள் பலர் வாழ்த்து தெரிவித்து தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
English Summary
serial that gave life to all of us Chennai is 386 years old Chief Minister MK Stalin