திருமணத்துக்கு மறுத்த பெண்..வாலிபர் செய்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


கார் தற்செயலாக ஏரியில் விழுந்ததாகவும், தான் நீந்திக்கொண்டு வந்து உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார். ஆனாலும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர்  திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறது. இதே பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா என்ற பெண்  திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் ரவியும், ஸ்வேதாவும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது நண்பர்களாக பழகி இருவருக்கும்  காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பல முறை தனது காதலை ஸ்வேதாவிடம் தெரிவித்து உள்ளார். அதற்கு அவர் உங்களுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனஅவர்களுடன் நீங்கள் வாழுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனாலும் ரவிக்கு ஸ்வேதா மீது உள்ள காதல் குறையாதல் தொடர்ந்து தான் வலியுறுத்தியும் ஸ்வேதா தனது காதலை நிராகரித்துவந்துள்ளார் .இதனால் ஆத்திரம் அடைந்த  ரவி சம்பத்தன்று ரவியும், ஸ்வேதாவும் ஒரே காரில் சந்தனஹள்ளி என்ற பகுதியில் உள்ள ஏரிக்கரையில் காரில் சென்றனர்.

அப்போதும் ரவி, ஸ்வேதாவிடம் உனக்காக குடும்பத்தை விட்டு வந்து விடுகிறேன் என்று மீண்டும் கூறியுள்ளார்.  காதலை நிராகரித்தார் ஸ்வேதா. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி காருடன் ஏரியில் பாய்ந்தார். இதில்  ஸ்வேதா தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.  ரவி நீச்சல் அடித்துக்கொண்டு வெளியே தப்பி வந்து விட்டார்.

 சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து காருடன் ஏரியில் மூழ்கி இறந்த ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிர் தப்பிய ரவியிடம் விசாரணை நடத்திய போது கார் தற்செயலாக ஏரியில் விழுந்ததாகவும், தான் நீந்திக்கொண்டு வந்து உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார். ஆனாலும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The woman who rejected marriage the atrocity committed by the youth


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->