நீட் தேர்வை எதிர்க்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.. திமுக, காங்கிரசை வெளுத்து வாங்கிய சீமான்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டியை எதிர்க்க திமுக மற்றும் காங்கிரஸ்க்கு என்ன தகுதி இருக்கு என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க்கோரி தமிழக அனைத்து கட்சி உறுப்பினர்களின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் இந்த தீர்மானத்தை மீண்டும் சட்டபேரவை குழுவினருக்கே திருப்பி அனுப்பினார்.

இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் வரும் 8ஆம் தேதி சட்டபேரவை சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நீட் தேர்வை எதிர்த்து திமுக மற்றும் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் சட்டப் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. நீட் தேர்வை கொண்டு வந்தது யாரென்று.? காங்கிரஸ் கட்சியா இல்லையா, அதே நேரத்தில் கலைஞர் ஐயா நீட் தேர்வை வாழ்த்தியும், வரவேற்றும் கடிதம் எழுதியிருந்தாரா இல்லையா.? அப்புறம் எப்படி திடீர்னு அதிமுக நீட் தேர்வ கொண்டு வந்துச்சுன்னு சொல்றீங்க. உங்களுக்கு என்ன தகுதி இருக்கு. திடீர்னு புனித வேடம் போடுறீங்க என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக மற்றும் காங்கிரஸை விளாசித் தள்ளியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman speech about NEET issue


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal