என்னால் முடியும்., பாஜகவில் முடியுமா? அண்ணாமலைக்கு சவால் விடுத்த சீமான்.!
seeman say annamalai and bjp election issue
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருவதாக கூறும் அண்ணாமலை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயாரா? என்ற கேள்வியை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவிக்கையில்,

"வருகின்ற 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக ஒன்று திமுக முதுகின் பின்னால் நிற்கும், இல்லை ஐயா எடப்பாடி கே பழனிசாமி முதுகின் பின்னால் நிற்கப் போகிறது.
நீங்கள் பாஜக எதுக்கு வளர்கிறீர்கள்? என் மரத்திற்கு கீழே வளர்கின்ற குட்டை செடி தான் பாஜக. என் மரத்தின் நிழலில் வளரக்கூடிய சிறுசெடி பாஜக.

பாஜக நாம் தமிழர் கட்சிபோல் தனித்து போட்டியிட முடியுமா? உலகத்தின் ஹீரோ மோடி என்று பிரச்சாரம் செய்து தனித்துப் போட்டியிட முடியுமா?" என்று சீமான் அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
English Summary
seeman say annamalai and bjp election issue