ஈபிஎஸ் முதுகுக்கு பின்னாடி.. 7 இல்ல 8 சீட்டுகள் தான்.. அதையாவது கொடுப்பாரா.? அண்ணாமலையை வெளுத்த சீமான்.!!
Seeman response to Annamalai comments
பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருந்தார். அதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் சீமான் தோற்பது உறுதி. முடிந்தால் அவர் எதிர்த்து வாரணாசியில் சீமான் நிற்கட்டும் என சவால் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் அண்ணாமலையின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் "நான் எங்க நின்னாலும் தோத்துருவேன், தம்பி எங்க நின்னாலும் ஜெயிச்சிடுவாரா? பாஜக ஜெயிச்சிடுமா?

நான் ஒரு சிங்கமா, நேர்மையா, துணிவா நிக்கிறேன். நான் தனியா நிற்கிறேன், என்னோட யார் வேணாலும் மோதிக்க சொல்றேன். 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட கட்சின்னு சொல்றீங்க, வாங்க தனியா தமிழ்நாட்டில் போட்டியிடலாம்.
நான் வாங்கும் ஓட்டை விட 1% அதிகமாக வாங்கி காட்டட்டும். எதுக்கு வெட்டி பேச்சு? நடையாக நடந்து எங்க அய்யா எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தான் போய் நிற்க போறிங்க. அவருடைய முதுகுக்கு பின்னாடி நிற்பீங்களா? ஒரு அடி முன்னாடி வந்து நிற்பீர்களா.?

நான் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். நீங்க எத்தனை இடத்தில் போட்டியிடுவீங்க? வேட்பாளர்கள் வச்சிருக்கீங்களா? அதிகபட்சம் 7 இல்ல 8 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவீங்க.
அதையே அவரிடம் ஏழு, எட்டு முறை நடையாக நடந்து கெஞ்சி வாங்கணும். அதை கொடுப்பாரான்னு யோசிக்கணும். பாஜகவுக்கு அவர் ஒதுக்கும் சீட்டுகள் எல்லாம் வேஸ்ட் தான். மிகப்பெரிய பின்னடைவை அவருக்கும் சேர்த்து கொடுக்கும்" என அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்ததோடு, எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
English Summary
Seeman response to Annamalai comments