'ஸ்டாலினும் வெளியேறிவிட்டால், இந்தியா கூட்டணி எங்கு இருக்கும்..? கூட்டணியில் இருக்கும் வலுவான தலைவர் மு.க.ஸ்டாலின் தான்'; சீமான் பதில் ..!
Seeman replies that MK Stalin is the strongest leader in the India alliance
இந்தியா கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுத்தமான தலைவர் என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மணி சங்கர் அய்யர் தெரிவித்திருந்தார்.
அவரைத்தொடர்ந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இந்தியா கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முன்மொழிந்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:
இந்தியா கூட்டணியிலேயே வலுவாக இருப்பது திமுகதான் என்றும், ஏனெனில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. காங்கிரஸிற்கு 10 உறுப்பினர்களை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸிற்கு இந்த வலு இல்லை என்றும், அதனால் மு.க.ஸ்டாலின் வெளியேறிவிட்டால் இந்தியா கூட்டணி என்பது எழுத்தில் மட்டும்தான் இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். வேறு எந்த வலுவான தலைவர்களும் அந்த அணியில் இருக்கமாட்டார்கள். ஏனெனில் கூட்டணியில் இருந்து மம்தா ஏற்கனவே வெளியேறிவிட்டார். கூட்டணியில் இருந்தால்கூட சிலர் தனித்தே தேர்தலை சந்திக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்டாலினும் வெளியேறிவிட்டால், இந்தியா கூட்டணி எங்கு இருக்கும்..? என்று கேள்வி எழுப்பியதோடு, இந்தக் கூட்டணியில் தற்போது வலுவாக இருப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman replies that MK Stalin is the strongest leader in the India alliance