#BREAKING || தடை இல்லை.... அதிமுக பொதுகுழு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அதிமுக பொதுக்குழுவில் இடம் பெற்றுள்ள 10க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், அதிமுகவின் வரலாற்றில் முக்கிய வழக்காக அமைய உள்ள அதிமுக பொதுகுழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த இந்த வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.

அதில், உட்கட்சி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது சட்டத்திற்கு எதிரானது என்று ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது. 

அப்போது நீதிபதிகள், "சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது. உட்கட்சி விவகாரத்தில் ஓர் எல்லைக்கு மேல் தலையிட முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி, உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நடக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலையிட விரும்பவில்லை. அதே சமயத்தில் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு இருக்கிறது" என்ற கேள்வியும் நீதிபதிகள் எழுப்பி உள்ளனர்.

இது மட்டும் அல்லாமல் பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் வழிகாட்ட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், அதிமுகவின் கட்சி விவகாரங்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு வந்தது ஏன் என்ற கேள்வியும் எழுப்பினர்.

நட்பு, சண்டையோ உங்களுக்குள் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் உங்கள் கட்சி தொடர்பான எல்லா பிரச்சனைகளையும் பொதுக்குழுவில் விவாதங்கள் செய்யுங்கள், நீதிமன்றத்தில் விவாதிக்காதீர்கள் என்று அறிவுரை வழங்கினர்.

இந்நிலையில், வரும் 11 ஆம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sc admk ops vs eps case now


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->