சவுக்கு சங்கரின் தாயார் மரணம் - எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!
Savukku shankar mother death ADMK EPS
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "யூட்யூபர் சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் திருமதி. கமலா அம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்திற்காக, திருமதி. கமலா அம்மாள் அவர்களை திமுக அரசின் காவல்துறையால், திமுக மற்றும் கூட்டணி கட்சி குண்டர்களால் சந்தித்த துயரங்கள் ஏராளம்.
வயதான தாய் என்று கூட பாராமல் அவரும் கடும் துயருக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டார்.
இந்நிலையில், திருமதி. கமலா அம்மாள் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
பாசமிகு தாயாரை இழந்து வாடும்
திரு. சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த திருமதி. கமலா அம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Savukku shankar mother death ADMK EPS