சவுக்கு சங்கர் உடல்நிலை கவலைக்கிடம்? முதல்வர் ஸ்டாலினுக்கு பறந்த தகவல்! - Seithipunal
Seithipunal


பிரபல யூ-டியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, அவரின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் சவுக்கு சங்கர் என்ற அரசியல் விமர்சகரை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தேசிய கட்சி மட்டுமல்லாமல், சிறு கட்சிகள் முதற்கொண்டு அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து, அனைத்து தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள சவுக்கு சங்கர், அண்மையில் நீதிமன்றம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார்.

அதில், நீதித்துறையில் ஊழல் நிறைந்து விட்டதாக ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார். இது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

ஆனால், தான் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என்று சவுக்கு சங்கர் தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதிகள் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், கடலூர் மத்திய கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே சவுக்கு சங்கரை பார்க்க இரண்டு தினங்களில் 40 பேர் வருகை தந்ததால், சவுக்கு சங்கரை பார்ப்பதற்கு ஒரு மாதம் தடை விதி ப்பதாக சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனை அடுத்து சவுக்கு சங்கர் சிறைச்சாலையிலேயே உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருவதாக அவரின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், கைதிகள் உரிமைகள் மன்றத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான புகழேந்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தால் சவுக்குசங்கரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Sankar health issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->