தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்.. மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி.. சசிகலா பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை பழைய அரண்மனையில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று இந்த கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும். திமுக ஆட்சியில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். தேர்தலின் போது அவர்கள் கூறியது எதையும் ஆட்சிக்கு வந்த பின்னர் செய்யவில்லை. 

இதனால் தான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும், மக்களுக்கு என்ன தேவை என்று மத்திய அரசிடம் கேட்டு வாங்குவதை விட்டுவிட்டு, அவர்களை குறை கூறிக் கொண்டே இருக்கிறது. மத்திய அரசை குறை கூறுவது மட்டுமே நமது வேலையல்ல. 

மக்களின் ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த பின்னரும் இதையே இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதிமுக ஆட்சியில் கூட மத்தியில் வேறு அரசு இருந்தது, அப்போது எல்லாம் இதுபோல கூறவில்லை. மக்களுக்கு என்ன திட்டங்கள் தேவை அதைக் கேட்டு வாங்கி கொடுக்கப்பட்டது. திமுக அரசு அடுத்த தேர்தல் வரை மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டேதான் இருக்கும். ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கிய மக்களாட்சியை கொண்டு வருவதே என்னுடைய நோக்கம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala press meet about dmk govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->