மக்களவை தேர்தலில் விஜயகாந்துடன், சரத்குமார் கூட்டணியா? சரத்குமார் பரபரப்பு பேட்டி!! - Seithipunal
Seithipunal


வருகிற மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய கட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. அடுத்து மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியா?, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது.   

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், முக்கியமான கட்சி நிகழ்ச்சிகளை தவிர மற்ற பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். அண்மையில், மேல் சிகிச்சைக்கு அமெரிக்க சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். முழு நலத்துடன் அவர் தாயகம் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்.

விஜயகாந்த் முழு நேர அரசியலில் ஈடுபட முடியாததால், அவரது மனைவி பிரேமலதாவை தேமுதிகவின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுத்தார். இதைத்தொடர்ந்து, அவரது மகன் விஜய் பிரபாகரன், அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். தேமுதிக சார்பில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் விஜய் பிரபாகரன் கலந்துகொள்கிறார்.

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஜயகாந்துடன் கூட்டணி வைப்பீர்களா என சரத்துக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சரத்குமார், தேவைப்படும்போது விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்கப்படும் என பதிலளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sarathkumar Press Meet


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->