இந்தியா கூட்டணியில் அதிமுக? சரத்பவார், மம்தா பேச்சால் அலறும் திமுக! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக கருதப்பட்ட அதிமுக  அக்கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக தேசிய தலைமை இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் காத்து வருகிறது. கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்த பாஜகவுக்கு தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி இருப்பது சமட்டி அடியாக விழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக அமைத்திருக்கும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பல மாநில கட்சிகளும், தமிழகத்தில் திமுக தலைமையில் பெற்றுள்ள கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை வரவேற்றுள்ளன.

இந்த நிலையில் மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரிடம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவை இந்தியா கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் "திமுக இந்தியக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கியமான கட்சி. எனவே இந்தியா கூட்டணிக்குள் அதிமுகவை இணைப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படாது.

இது குறித்து மு.க ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தப்படும்" என சரத் பவார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சனாதன தர்மம் விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் திமுக மீது அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் தற்போது அதிமுகவுக்கு ஆதரவு குரல் எழுந்து வருவது திமுகவை அதிர்ச்சி ஆழ்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sarath Pawar say bringing AIADMK into India alliance will be discussed with MKStalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->