அதிமுக வேட்பாளரின் வெற்றி செல்லாது என அறிவித்த உயர் நீதிமன்றம்... இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் தேவி மாங்குடி மற்றும் பிரியதர்ஷினி அய்யப்பன் வெற்றி பெற்றதாக, 2 வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. 

தேர்தல் அதிகாரிகள் செய்த தவறு, தேர்தல் முடிவில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஏற்பட்ட நிலையில் தேவி மாங்குடி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிரியதர்ஷினி அய்யப்பன் பதவியை ஏற்பதை தடை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவியாக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி மாங்குடி வெற்றி பெற்றதுதான் செல்லும், அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரியதர்ஷினி வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேவி வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரியதர்ஷினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேவி வெற்றி பெற்றதாக அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sankarapuram local body election case


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal