இனி சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய இது தேவையில்லை.. திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு வசதியை கேரளா அரசால் தொடங்கப்பட்டது. இதனை கேரளா காவல்துறை நிர்வகித்து வந்தனர். 

இதையடுத்து தரிசன முன்பதிவு செயல்பாடுகள் முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர ஆணை பிறப்பிக்கக்கோரி கோரி கேரளா உயர்நீதிமன்றத்தின் தேவஸ்தானம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையின் போது தேவஸ்தானத்திற்கு ஆதரவான தீர்ப்பை கேரளா உயர்நீதிமன்றம் வாங்கியது. 

சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு செயல்பாடுகள் இனி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் பட்சத்தில் முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும். நிலக்கல் உட்பட முக்கிய இடங்களில் உடனடி தரிசனம் முன்பதிவு செய்ய கூடுதல் வசதிகள் செய்யப்படும். ஆதார் உட்பட ஏதாவது ஒரு அடையாள அட்டை பயன்படுத்தி உடனடி தரிசன அனுமதிக்கு முன்பதிவு செய்யலாம். மேலும், இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sabarimala sami darshan does not require corona vaccination certification


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->