நீங்களா ஓடிடுங்க.. இல்லைனா.. ஓட ஓட விரட்டி அடிப்போம்.. ஆளுநர் ஆர்.என் ரவியை மிரட்டும் ஆர்.எஸ் பாரதி.!!
RS Bharathi warns Governor ravi himself run away
அரியலூர் மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் "திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் அழிந்து விட்டார்கள். கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ள கட்சி திமுக மட்டும் தான். திமுகவோடு யார் மோதினாலும் அவர்களுக்கெல்லாம் கல்லறைகள் கட்டி அந்த கல்லறையை திறந்து வைப்பதும் நாங்களா தான் இருக்கிறோம்.

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி ஆளுநர் ஆர்.என் ரவி பேசியுள்ளார். இது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம். கிண்டியில் 159 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு அனைத்து வசதிகளும் மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் தான் செய்து செய்து தரப்படுகிறது.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை இப்படி வாங்கிக் கொண்டு, அதில் சாப்பிட்டுக் கொண்டு, அந்த வரிப்பணத்தில் வாழ்க்கை நடத்திக் கொண்டு நாட்டு மக்களை காட்டிக் கொடுப்பேன் என்று சொன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா?

ஆளுநர் ரவி அவர்களே நீங்களாக ஓடி விடுங்கள், இல்லை என்றால் விரட்டி அடிக்க படுவீர்கள் இதை மிரட்டுவதற்காக சொல்லவில்லை. உங்களை நீதிமன்றத்திலே நிறுத்தி ஓட ஓட விரட்டுவதற்கு திமுக சட்டத்துறை தயாராகிவிட்டது. இதுவரை யாரும் செய்யாத சாதனையை தமிழக முதல்வர் செய்துவிட்டார் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர் ரவி ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு அறிக்கை வெளியிடுகிறார். இது எவ்வளவு பெரிய தேச துரோகம்? என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
RS Bharathi warns Governor ravi himself run away