'வி.ஐ.பி., வி.வி.ஐ.பி.க்களுக்கு ராஜ மரியாதை'...! - புரோட்டோகால் உபசரிப்புக்காக ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்து அதிரடி அரசாணை...!
Royal honors for VIPs and VVIPs Government orders allocating 6point85 crore protocol entertainment
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைத் தவிர, பிற முக்கிய பிரமுகர்கள் மாவட்டங்களுக்கு வருகை தரும் போது மேற்கொள்ளப்படும் வரவேற்பு மற்றும் ஏற்பாடு பணிகளுக்கான செலவுகளை சமாளிக்க தமிழ்நாடு அரசு ரூ.6.85 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிதி ஓராண்டுக்கான செலவினமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் பிரிவுக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படுகிறது. முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது தேவையான அடிப்படை ஏற்பாடுகள் மற்றும் இதர செலவுகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.மாவட்டங்கள் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது.பி பிரிவில் உள்ள நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சி பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ.15 லட்சம் வீதம் நிதி வழங்கப்பட்டுள்ளது.முக்கிய பிரமுகர்களின் மாவட்ட வருகையின்போது ஏற்படும் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Royal honors for VIPs and VVIPs Government orders allocating 6point85 crore protocol entertainment