விமர்சனம்! கடை விரித்தும் யாரும் வரவில்லை என்றால் வாங்க சார்னு அழைக்கதான் வேண்டும்...! - துரைமுருகன்
Review If no one comes to the shop even after opening it you should call the seller Duraimurugan
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற தலைப்பில் எழுச்சி பேரணி மேற்கொண்டு வருகிறார். இதில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இதற்கு முன்பாக திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த சமயம், "திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமையாகவுள்ளது. நாங்கள் இந்த கூட்டணியில்தான் தொடர்வோம்" என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து,நேற்று த.வெ.க. மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
துரைமுருகன்:
அதற்கு அவர் தெரிவித்ததாவது, "EPS கடை விரித்தும் யாரும் வரவில்லை. கடை விரித்து யாரும் வரவில்லை என்றால் வாங்க சார் என்றுதான் அழைக்க வேண்டும்" என துரைமுருகன் பதிலளித்துள்ளார்
.மேலும், 234 தொகுதிகளிலும் திமுகவுக்கு Bye, Bye மற்றும் மு.க. ஸ்டாலினுக்கு Bye, Bye ஹேஷ்டேக்கை முன்னெடுத்து வருகிறாரே? என்ற கேள்விக்கு "அந்த அளவிற்கு வந்துவிட்டாரா?" என்று நகைப்புடன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி,எடப்பாடி பழனிசாமி அழைப்பை நாம் தமிழர் கட்சி 'சீமான்' தற்போது நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Review If no one comes to the shop even after opening it you should call the seller Duraimurugan