திமுக அரசை கண்டித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை வானகத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த பொதுக்குழு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்தெடுக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஜெயலலிதா படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி. பொதுக்குழு நடத்த வருமாறு அவை தலைவர் தமிழன் உசேன் நிலையில் அதனை எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிய பொதுக்குழு தொடங்கியது. 

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 3வது தீர்மானத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள முன்பே திட்டமிடாமலும், காலத்தே மீட்பு பணிகளை மேற்கொள்ளாமலும் மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியதோடு, புயல் தாக்கத்தால் பெய்த பெரும் மழையின் பாதிப்பில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த நிவாரண நிதிகளை வழங்காத திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் முன்மொழிய பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Resolution in AIADMK general meeting condemning DMK govt


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->