செந்தில்பாலாஜி பதவி விலகு.! கோபாலபுரம் கைகுலுக்கி பிஜிஆர் எனர்ஜி.! ஆகா., லிங்க் வைக்கும் அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மின்சார துறையில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அவரின் அந்த பதிவில், "கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20.00 வரை கொள்முதல் செய்ய பட்டுள்ளது.

உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவை விட 5 மடங்கு இது கூடுதலான விலை.! 

1 MWh - INR 20,000
1000 KWh is equal to 1 MWh. 
1 KWh (1000 wats) is 1 Unit.
1 unit = INR 20." என்று தெரிவித்துள்ளார்.

இதற்க்கு பதிலளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென திரு.அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும்,அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல்,All purpose அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும். இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும். 

2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15541 கோடி நிலுவையில் இருந்தது. அக். 1ல் PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை." என்று விளக்கமளித்தார்.

ஆனால், விடாத அண்ணாமலை, ஒரு ஆதாரத்தை வெளியிட்டு, செந்தில் பாலாஜிக்கு கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "செப் 24 - அக் 19 வரை பயன்படுத்திய மின்சாரம் 6200 மில்லியன் யூனிட். அதில் இந்திய மின் சந்தையில் வாங்கியது 397 மி.யூ. அதிலும் ரூ. 20/-க்கு வாங்கிய மின்சாரம் 65 மி.யூனிட் மட்டுமே. ரூ.20/-க்கு குஜராத் கொள்முதல் செய்த மின்சாரம் 131 மி.யூனிட்கள். 

கடந்த ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அக் 18 அன்று இந்திய மின் சந்தையில் தமிழகம் வாங்கியது 7.66 மி.யூ. குஜராத் வாங்கியது 45 மி.யூ, மஹாராஷ்டிரா வாங்கியது 18 மி.யூ. ஹரியானா வாங்கியது 14 மி.யூ. 

இந்திய மின் சந்தையில் அக் 18 அன்று விலை, குறைந்தபட்சம் ரூ.1.99/- யூனிட். அதிகபட்ச விலை ரூ 8.50/- யூனிட், சராசரி ரூ.6.00/- யூனிட். அதிமேதாவிகளும், ஆர்வக்கோளாறுகளும், வாட்ஸப் வீரர்களும் IEX இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்." என்று அண்ணாமலைக்கு விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், "கோபாலபுரம் (கைகுலுக்கி) பிஜிஆர் எனர்ஜி (கைகுலுக்கி) மின்சார அமைச்சகம் (கைகுலுக்கி) செந்தில் பாலாஜி.

இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்... விடை எளிதில் புரியும்!" என்று லிங்க் வைத்து அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், 'மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும்' என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனை பாஜக தொண்டர்களும் கையில் எடுத்து #ResignEBMin (மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகு) ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ResignEBMin


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal