நேருக்கு நேர் சந்திக்க போகும் இபிஎஸ்-ஓபிஎஸ்! ஓபிஎஸ் இருக்கையில் அமர போகும் ஆர்.பி உதயகுமார்! - Seithipunal
Seithipunal


இறுதி முடிவு சபாநாயகர் அப்பாவு கையில்! 

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார். இவரே தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தற்பொழுது தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். ஜூலை 11ம் தேதி அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளிலும் நீக்கப்பட்டனர்.

பின்னர் எதிர்க்கட்சியின் கொறடாவாக எஸ்பி வேலிமணியும் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரும் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நியமித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இது சம்பந்தமான ஆவணங்கள் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பப்பட்டது.

இதற்கு முன்பு அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக செயல்பட்டார். தற்பொழுது அந்த பதவிக்கு ஆர்பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஆர்பி.உதயகுமார் அமரப் போகிறார். ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க போகிறார்கள். 

மேலும் இரு அணிகளாக பிரிந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கை ஒதுக்கீடு என்பது செய்ய வேண்டும். இது தொடர்பாக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் "இருதரப்பும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் என சென்றுள்ளனர். உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பும் உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பும் என மாறி மாறி வருகிறது. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு இறுதி முடிவு தேர்தல் ஆணையம் தான் செய்யும். சட்டமன்றத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் என அவர்கள் உரிமை நிலைநாட்டப்படும். உறுப்பினர்களை எங்கு அமர வைப்பது என்பது சட்டமன்ற தலைவர் உரிமை. எனவே இருதரப்பிற்கும் இருக்கைகளானது ஒதுக்கப்படும்" என தனது பேட்டியில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் இம்மாதம் நடைபெற உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நிலவு வரும் பல்வேறு மக்கள் பிரச்சனையை எடுத்துரைக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பார்களா என்பது வரவிருக்கும் கூட்டத்தொடரில் தான் தெரிய வரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RB Udayakumar is going to sit in the OPS seat


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->