ரஜினி அரசியல்: வரும் 30 ஆம் தேதி இறுதி முடிவு?! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் 30ந் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் அரசியல் வருகை குறித்து சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில், "காய்ச்சல் ஏற்பட்டதாகவும், கொரோனா காலத்தில் மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு, ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக" தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிக்கை குறித்து ரஜினி தெரிவிக்கையில், மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு தனது பெயரில் வந்த அறிக்கை உண்மையல்ல, மருத்துவ தகவல்கள் மட்டுமே உண்மை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வரும் 30ந் தேதி காலை நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rajini political entry nov 30


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->