சொந்த கட்சியின் ஆட்சிக்கு எதிராக பாதயாத்திரை! காங்கிரசில் உள்கட்சி கும்மாங்குத்து! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சி காலத்தில் செய்த ஊழல் விவரங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி, முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் அவரின் ஆதரவாளர்கள் உடன் கடந்த மாதம் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதற்க்கு காங்கிரசின் தேசிய தலைமை கடும் எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக நின்றது.

இந்நிலையில், ராஜஸ்தானில் நாளை மறுநாள் முதல் பாதயாத்திரை தொடங்க உள்ளதாக காங்கிரஸின் சச்சின் பைலட் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் ஊழலுக்கு எதிராக 5 நாட்கள் பாதயாத்திரை செல்லப் போவதாக சச்சின் பைலட் தற்போது அறிவித்துள்ளார்.

மேலும், காங்கிரசின் தலைவராக சோனியாவுக்கு பதில், பாஜகவின் வசுந்தரா ராஜேவை தலைவராக்க அசோக் கெலாட் நினைப்பதாக சச்சின் பைலட் விமர்சனம் செய்துள்ளார் உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த போது, சச்சின் பைலட் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது முதல் இருவருக்கும் இடையேயான மோதல் இருந்து வந்தது. வரும் தேர்தலில் தன்னை முதல்வர் ஆக்க வேண்டும் என்று சச்சின் பைலட் இப்படி செய்து வருவதாக அம்மாநில அரசியல் வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajasthan Congress leader Sachin Pilot 2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->