கேள்வி மழை...! தமிழ்நாடு என்றுமே உங்களுக்கு தலைகுனியாது...! - மத்திய பாஜகவுக்கு மு.க. ஸ்டாலின் கடும் சவால்
Rain questions Tamil Nadu never bow down you MK Stalin tough challenge central BJP
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கடும் அரசியல் கேள்விகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டுக்கு வருகிற மத்திய பா.ஜ.க. அமைச்சர்களும், பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களும் சில முக்கியமான கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்கத் தயாரா?” என சவால் விடுத்துள்ளார்.

மேலும், “தமிழக மண்ணில் நின்றபடி ‘மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்’ என்று திறந்தவெளியில் அறிவிக்கத் தயார் உள்ளீர்களா? நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தொகை எவ்வளவு? அதே நேரத்தில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி எவ்வளவு? இதனை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்க முடியுமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல், கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களை பாதிக்கும் வகையில் உள்ள FCRA சட்ட திருத்தத்தை முழுமையாக வாபஸ் பெறுவீர்களா? அல்லது அதனை விரைவில் அமல்படுத்தப் போகிறீர்களா? என்றும் அவர் வினவியுள்ளார்.
இந்த கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தனது ‘டெல்லி தலைவர்களிடம்’ இருந்து தெளிவான பதில் பெற்று மக்களிடம் தெரிவிக்க முடியுமா? என்றும் சவாலாக முன்வைத்துள்ளார்.
மேலும், “அரசியல் அவதூறுகளை பரப்புவதை நிறுத்தி, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் பற்றி எப்போது பேசப்போகிறீர்கள்?” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“தமிழ்நாட்டை பலவீனப்படுத்த எத்தனை முயற்சிகள் நடந்தாலும், இந்த மண் தலைகுனியாது. தமிழ்நாடு போராடும், இறுதியில் தமிழ்நாடு வெல்லும்!” என உறுதியுடன் அவர் தனது பதிவில் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Rain questions Tamil Nadu never bow down you MK Stalin tough challenge central BJP