கடைசி நாள் வேட்புமனு தாக்கல்...! 'விஜய்யின் பேச்சு அரசியல் அறியாமையை வெளிப்படுத்துகிறது'...! - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
Last day filing nominations Vijay speech reveals political ignorance Edappadi Palaniswami sensational interview
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவை நோக்கி அரசியல் களம் தீவிர சூட்டைப் பெற்றுள்ளது. இன்று வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால், தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலகங்களில் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் இன்றைய தினத்தை தேர்வு செய்து தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து களத்தை சூடுபடுத்தினர்.
அந்த வரிசையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவை தாக்கல் செய்து மீண்டும் தேர்தல் களத்தில் குதித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.தி.மு.க. மற்றும் த.வெ.க. இடையேதான் முக்கிய போட்டி நிலவுகிறது என்ற விஜய் கூறிய கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அ.தி.மு.க.தான் உண்மையான பிரதான எதிர்க்கட்சி.
இத்தகைய கருத்துகள் அறியாமையை வெளிப்படுத்துகின்றன. அதுபற்றி அவரிடமே கேட்க வேண்டும். மக்கள் நம்பிக்கை பெற்ற கட்சி அ.தி.மு.க. தான்” எனத் திடமாக பதிலளித்தார்.மேலும் அவர் தெரிவிக்கையில், “இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு எங்களுக்கே தெளிவாக உள்ளது. 210 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உறுதியாக இருக்கிறது.
தேமுதிகவிற்கு 2026ஆம் ஆண்டில்தான் எம்.பி. இடம் வழங்கப்படும் என முன்பே தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்களின் அரசியல் நிலைப்பாடு மாறியதால் கூட்டணியும் மாறிவிட்டது” என தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Last day filing nominations Vijay speech reveals political ignorance Edappadi Palaniswami sensational interview