40 வயதுக்குப் பிறகு சிறுதானியங்களை சேர்த்த உணவுப் பழக்கம் உடலை சக்திவாய்ந்ததாக மாற்றும்...! - மருத்துவர்கள் முக்கியக் குறிப்பு - Seithipunal
Seithipunal


உடல் ஆரோக்கியத்துக்கு தினமும் மூன்று வேளைகளிலும் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக இரவு உணவை மாலை 6:30-7 மணிக்குள் முடித்துவிடுவது செரிமானத்திற்கும் உடலின் நன்மைக்கும் மிகுந்த பயன் தரும்.

முன்னதாகவே நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கம் செரிமானத்தை எளிதாக்கி, உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.இரவில் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளை தேர்வு செய்வது முக்கியம். கோதுமை ரவை கிச்சடி, இட்லி போன்ற சிறு எளிய உணவுகள் சிறந்தவை.

சர்க்கரை நோயாளிகள் இரவில் இட்லி சாப்பிடாமல், பதிலாக கோதுமை ரவை கிச்சடி, சப்பாத்தி, சிறுதானியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட அடை போன்ற உணவுகளைச் சேர்க்க வேண்டும்.40 வயதுக்குப் பிறகு சிறுதானியங்களை அதிக அளவில் உட்கொள்வது நல்லது.

பொங்கல், உப்புமா அல்லது சிறுதானிய பிரியாணி போன்ற வடிவில் உணவாக சமைத்து சாப்பிடலாம். ஆரம்பத்தில் இந்த உணவு பழக்கம் கொண்டுவரும் போது பசி உணரலாம். இரவு 10 மணி க்குப்பின் பசி உணர்ந்தால், கனமான உணவுகளைத் தவிர்த்து பழங்கள் மட்டுமே சாப்பிடலாம்.

குறிப்பாக கொய்யாப்பழம், ஆப்பிள், பப்பாளி போன்ற பழங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.இந்தப் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றினால், உடல் ஆரோக்கியமும் செரிமான திறனும் மேம்படும் என மருத்துவர்கள் உறுதி செய்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Eating diet rich grains after age 40 make body stronger Doctors important note


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->