வயிற்றில் அதிக வாயு பிரச்சனை...? சித்த மருத்துவ ரகசியங்கள் உங்கள் செரிமானத்தை எளிதாக்கும் முறைகள்...! - Seithipunal
Seithipunal


வயிற்றில் வாயு பிரச்சனை ஏற்படும் காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி இங்கே சித்த மருத்துவத்தின் ரகசியங்கள்.நாம் உணவு சாப்பிடும் போது பொதுவாக சிறிது காற்றையும் சேர்த்து விழுங்கி விடுகிறோம். அதிலும் அவசரமாக உணவு உண்ணும்போது, பேசிக் கொண்டே சாப்பிடும்போது, காற்றடைத்த பானங்களை குடிக்கும் போது அல்லது தண்ணீரை விரைந்து குடிக்கும் போது வயிற்றில் காற்று அதிகமாக சேர்கிறது.

உணவுகளில் வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, அவரை மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் அதிக வாயுவை உருவாக்கும் தன்மை கொண்டவை.

மசாலா பொருட்கள் வயிற்றில் காற்றை வெளியே அனுப்பும் பண்பை கொண்டுள்ளன.
வாயு பிரச்சனையை குறைக்கும் சித்த மருத்துவ பரிந்துரைகள்:
இளஞ்சூடான வெந்நீர் குடிப்பது வயிற்று பிரச்சனைகளை குறைக்கும்.
உணவில் மோர், தயிர், சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், கருவேப்பிலை பொடி, பிரண்டைத் தண்டு துவையல் போன்ற சித்த உணவுப் பொருட்களை சேர்க்க வேண்டும்.
மோர் அல்லது தயிருடன் பெருங்காயம், சீரகம் சேர்த்து குடிக்க வேண்டும்.
காலை மற்றும் இரவு வேளையில் சீரகத் தண்ணீரை ஒரு டம்ளர் அளவில் குடிக்க வேண்டும்.
அஸ்டாதி சூரணம் – 1 கிராம் அளவில் காலை மற்றும் இரவு வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
காலை மற்றும் மதிய உணவுக்குப் பிறகு குறுநடை நடந்து உட்கார வேண்டும்; இரவு உணவுக்குப் பிறகு ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்து பின்னர் தூங்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Excessive gas stomach Siddha medicine secrets ease your digestion


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->