பிரசார அனுமதி சர்ச்சை:ஒரு மணி நேரம் போதுமா...? விஜய் பிரசாரம் ரத்து...! - காவலர்கள் மீது ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


சென்னையில் த.வெ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர் விஜய் இன்று (திங்கட்கிழமை) சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் விருகம்பாக்கம்,வில்லிவாக்கம், அண்ணாநகர்,  தியாகராயநகர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் அவர் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, வில்லிவாக்கம் தொகுதியில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை, தியாகராயநகர் தொகுதியில் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மட்டுப்படுத்தப்பட்ட நேரம் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், இந்த குறுகிய நேரம் முழுமையான பிரசாரம் நடத்த போதுமானதாக இல்லாததால், விஜயின் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.இந்த சூழலில், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,"சென்னையில் தேர்தல் சீராகவும் ஜனநாயகமாகவும் நடைபெற வேண்டுமெனில், காவல் ஆணையர் மாற்றப்பட வேண்டும்.

தி.நகரில் எங்கள் தலைவர் விஜய் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை பிரசாரம் செய்ய முதலில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களிலேயே அதை வெறும் 1 மணி நேரமாகக் குறைத்தனர்.விஜய் பிரசாரம் செய்ய முடியாதபடி தடைகள் உருவாக்கப்படுகின்றன. அவரின் பிரசாரத்தைத் தடுக்கவே காவல் அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

இந்த விவகாரத்தில் சென்னை காவல் ஆணையரின் பங்கு குறித்து சந்தேகம் எழுகிறது. சென்னையில் விஜய் பிரசாரம் செய்ய முடியாத நிலை உருவாக திமுக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த பிரச்சினையை டெல்லி வரை கொண்டு சென்று முறையிட உள்ளோம்" என அவர் தெரிவித்தார்.இவ்வாறு அவர் பேட்டியில் தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Campaign permit controversy Is one hour enough Vijay campaign cancelled Adhav Arjuna makes strong allegations against police


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->