அவனியாபுரம் வரும் அரசியல் வாரிசு.! அதிமுக அமைச்சர் பெருந்தன்மையுடன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மதுரை உட்பட 10 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அனுமதி வழங்கியது. 

ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை வடநாடு, ஜல்லிக்கட்டு, எருது விடும் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 25 இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 இடங்களிலும், சிவகங்கையில் 1 இடங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களிலும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 6 மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிறார். முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு தடை என்று தெரிவித்த அதே காங்கிரஸ் கட்சின் வாரிசு இன்று தமிழகம் வருவதால் ஏதேனும் எதிர்ப்பு உண்டாகும் என்பதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று காலை 8 மணியளவில் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், 

"தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழரின் பாரம்பரிய விளையாட்டை பார்க்க வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தேசிய தலைவர்கள் யார் வேண்டுமானாலும் தமிழகம் வரலாம். அவர் வருவது எதற்காக என்பது எல்லாருக்கும் தெரியும். விளையாட்டை அரசியல் நோக்கத்துடன் அணுக வேண்டாம்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul in avaniyapuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->