ஸ்டாலின் ‘சென்டிமென்ட்’ பேச்சால் மனசு மாறிய ராகுல் காந்தி?முக்கிய தமிழக தலையை பொறுப்பிலிருந்து தூக்க முடிவு! - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக–காங்கிரஸ் கூட்டணி குறித்த சலசலப்புகள் அரசியல் வட்டாரங்களில் நீடித்து வருகின்றன. இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டி டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய பேட்டியில், “அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை தனது மூத்த சகோதரராகப் பார்க்கிறார்; நானும் அவரை அப்படித்தான் கருதுகிறேன். அவர் என் குடும்பத்தில் ஒருவர்” என ஸ்டாலின் உருகியிருந்தார். மேலும், கூட்டணியை உடைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என்பதை இருவரும் அறிவோம் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த உணர்வுப்பூர்வமான பேச்சு ராகுல் காந்தியை சமாதானப்படுத்தியதாகவும், திமுகவுடன் இணக்கமாகச் செல்லும் மனநிலைக்கு அவர் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீப காலமாக, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கர் செயல்பாடுகள் திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமை சமரச முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக, ராகுல் காந்திக்கு நெருக்கமான கே.சி. வேணுகோபால் வரும் 17ஆம் தேதி சென்னை வர உள்ளார். மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை கேட்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த ஆலோசனைகளின் அடிப்படையிலேயே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் தரப்பில் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் “அதிகாரத்தில் பங்கு” வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். குறைந்தது 35 சட்டப்பேரவைத் தொகுதிகள், ஆட்சியில் பங்கு அல்லது வாரியத் தலைவர் பதவிகள், உள்ளாட்சி நிலைகளில் முன்கூட்டிய ஒப்பந்தம், குறைந்தது 2 முதல் 3 அமைச்சரவைப் பதவிகள் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், கடந்த தேர்தலை விட அதிக இடங்களை வழங்குவது திமுகக்கு கடினம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை” என்ற நிலைப்பாட்டை திமுகத் தலைமை முன்வைத்தாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பரிசீலிக்கலாம் என்ற மென்மையான அணுகுமுறையும் நிலவுகிறது.

அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது, தேசிய அரசியலில் திமுக ஒரு முக்கிய கூட்டணி சக்தியாக இருப்பதால், திமுக–காங்கிரஸ் கூட்டணி முறிவதற்கான வாய்ப்பு குறைவு. சில கோரிக்கைகளில் சமரசம் செய்து கூட்டணியைத் தொடர்வதே ராகுல் காந்தியின் தற்போதைய நோக்கம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi changed his mind after Stalin sentimental speech Decided to remove the important Tamil Nadu leader from office


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->