#சென்னை | பிரபல இயக்குனரின் கார் கண்ணாடி உடைப்பு!
R K Selvamani Car Windows broken case
சென்னை : இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை, விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.
புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட மெகா ஹிட் திரைபடங்களை இயக்கியவர் ஆர்.கே.செல்வமணி.
மேலும், செம்பருத்தி, மக்களாட்சி, ராஜமுத்திரை, அரசியல், ராஜஸ்தான், குற்றப்பத்திரிகை உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களையும் ஆர். கே.செல்வமணி இயக்கியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் அமைச்சர் நடிகை ரோஜாவின் கணவரான் இவர், தற்போது, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.கே. செல்வமணியின் வீட்டில் இருத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர்.
கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சம்மபவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
R K Selvamani Car Windows broken case