பெருமிதம்! தமிழகத்தையே தலை நிமிர செய்து.. தொழில்துறையில் முன்னேறிக்கொண்டே இருக்கிறோம்...! - முதலமைச்சர் - Seithipunal
Seithipunal


திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து அவர் தெரிவித்ததாவது," வேளாண்மையும் கலையும் செழித்து வளரும் திருவாரூர் மண்ணில் கலைஞரின் கொள்கை வாரிசாக விழாவில் பங்கேற்கிறேன்.

திருவாரூர் என்றாலே திருவாரூர் தேரும், கலைஞர் கருணாநிதியும் தான் நினைவுக்கு வருவார்கள். தொட்ட துறையில் எல்லாம் வெற்றி பெற்று தொலைநோக்கு பார்வையால் நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கலைஞர். மற்ற மாவட்டங்களில் உங்களில் ஒருவன் என பேசும் என்னை திருவாரூர் மக்கள் மட்டும் எங்களில் ஒருவன் என அழைக்கின்றனர். தம்பிமார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்கள் என அண்ணா தெரிவிப்பார்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உயரத்தில் மட்டுமல்ல அவரது செயல்பாடுகளாலும் உயர்ந்து நிற்கிறார். செய்தி சேனல் வளர்ச்சியை டிஆர்பி மதிப்பை வைத்து சொல்வது போல் தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியை டி.ஆர்.பி. ராஜாவை வைத்து சொல்லலாம். 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை நவீன முறையில் புதுப்பித்து இயங்க வைத்தவர் கலைஞர். தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடும்.

திருவாரூரில் 2.37 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் தொழில்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது. ஓடாத ஆழித்தேரை ஓட வைத்தவர் கலைஞர் கருணாநிதி. திருவாரூரில் சிப்காட் வளாகங்கள் அமைக்கும் முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன. திருவாரூரில் மட்டும் இதுவரை ரூ.143 கோடி பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. நன்னிலம், பட்டாம்பாளையத்தில் புதிதாக மாதிரி பள்ளி அமைக்கப்படும்.

திருவாரூரில் பழமை வாய்ந்த ஜூபிலி மார்க்கெட்டில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். மன்னார்குடியில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்.திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமனுக்கு திருவுருவச் சிலை நிறுவப்படும். திருவாரூரில் வாய்க்கால், நீர் மதகுகள் உள்ளிட்டவை 43 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும். இடையூறாக இருக்கும் மத்திய அரசையும் சமாளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Proud We are making Tamil Nadu proud and progressing in industry Chief Minister


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->