தொடரும் கரூர் ஐடி ரெய்டு.. தலைமறைவான முக்கிய புள்ளிகள்..? - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தை வருமான வரித்துறையினர் முற்றுகையிட்டு இன்றோடு 10 நாட்கள் ஆகிறது. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த மே 26ம் தேதி முதல் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரின் வீட்டிற்கு முதல் நாள் சோதனைக்கு சென்று வீட்டு வாசலிலேயே வருமானவரித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்திய திமுகவினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்போடு சோதனை நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் அசோக் குமார், அமைச்சரின் நெருங்கிய நண்பரும் அரசு ஒப்பந்தக்காரருமான சங்கர் ஆனந்த், கொங்கு மெஸ் மணி எனும் சுப்பிரமணி, பால விநாயகா புளூ மெட்டல் உரிமையாளர் தங்கராஜ், காளிப்பாளையம் பெரியசாமி உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் அனைவரும் தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் டெல்லியில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இவரும், சங்கர் ஆனந்தும் மலேசியா அல்லது சிங்கப்பூரில் குடும்பத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் சங்கர் ஆனந்தின் அலுவலகத்தில் மேலாளராக பணிபுரியும் ஷோபனா- பிரேம் குமார் வீட்டில் கடந்த மே 26ம் தேதி துவங்கிய சோதனை 6 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து வீட்டை பூட்டிவிட்டு கணவன், மகனுடன் கிளம்பிய ஷோபனா மீண்டும் வீடு திரும்பவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது.

ஷோபனாவும் அவரது குடும்பத்தினருடன் தலைமறைவாகி இருக்கலாம் என கரூர் வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது. வருமான வரித்துறை சோதனை காரணமாக 26ஆம் தேதி மற்றும் 29 ஆம் தேதி என ஒத்திவைக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் மாமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் மேயரும், துணை மேயரும் தலைமறைவானதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக திமுக கவுன்சிலர்கள் முனுமுனுக்கின்றனர்

கடந்த 26ம் தேதி நடந்த வருமான வரித்துறை பெண் அதிகாரி காயத்ரி தேவி உள்ளிட்டோர் மீது தாக்குதலில் ஈடுபட்டதால், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், தனது வீட்டுக்கு வந்த அதிகாரிகளை தாக்கியதாக துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நிபந்தனன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளதால் இவர்களும் கைதாகுவதை தவிர்ப்பதற்காக முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prominent people absconding in karur it raid


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->