கேரளாவில் பிரியங்கா காந்தியின் வைரல் வீடியோ...! சாலையில் விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவி செய்யும் காட்சி...!
Priyanka Gandhi viral video Kerala scene helping people road accident
கேரளாவில் உள்ள பிரியங்கா காந்தியின் தொகுதியான வயநாட்டில், 3 -வது நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இதில் நேற்று மாலை கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஈங்காப்புலா சாலையில், பிரியங்கா காந்தி பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார்.

அச்சமயம் சாலையில் 2 கார்கள் மோதி திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு குடும்பத்தினர் மோசமாக காயம் அடைந்தனர். இந்த விபத்தை கண்டதும் பிரியங்கா காந்தி தனது வாகனத்தை உடனடியாக நிறுத்தினார்.
அவர் காரை விட்டு இறங்கி மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு தன்னுடைய பாதுகாவலர்களிடம் தெரிவித்தார். மேலும் மருத்துவர்களை வரவழைத்து முதலுதவி அளிக்க உத்தரவிட்டார்.
அவருடைய பாதுகாப்பு குழுவுடன் வந்த அவசர ஊர்தி மூலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் விபத்து குறித்து அவர் விசாரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.மேலும், பிரியங்கா காந்தி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய விடியோவை , கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.மேலும் இது தற்போது இணையத்தில் வரைலாகி வருகிறது.
English Summary
Priyanka Gandhi viral video Kerala scene helping people road accident