சிறை செல்லும் வழியில் கைதி திடீர் மரணம்: மானாமதுரையில் மீண்டும் பரபரப்பு!
Prisoner Akash Dies Due to Breathing Difficulties While Being Transported to Jail
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
கடந்த 6-ஆம் தேதி, மானாமதுரை பகுதியில் ஆகாஷ் என்பவர் மதுபோதையில் இருவரை அரிவாளால் வெட்டி கொ*லை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆகாஷைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். அப்போது அவர் தப்பிக்க முயன்று கால் முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரை சிகிச்சையாக போலீஸார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது: பயணத்தின் போது அவருக்குத் திடீரென கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவ உதவிக்கு முயற்சி செய்தும், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தற்போது மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறைக்குச் செல்லும் வழியில் கைதி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. மேலும், ஆகாஷை அடித்து கொன்று விட்டதாக அவரின் உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
English Summary
Prisoner Akash Dies Due to Breathing Difficulties While Being Transported to Jail