ஒரு குற்றத்தை பார்த்தும் அமைதியாக இருப்பது தவறு...! - பெண்களுக்கு ஆதரவாக கோலி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ...!
very wrong remain silent despite witnessing crime Kohli releases awareness video support women
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி பெண்களுக்கு எதிரான 'Domestic Violence ' குறித்து முக்கியமான விழிப்புணர்வு செய்தியை பகிர்ந்துள்ளார்.
இதற்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு சிறப்பு வீடியோவில், கோலி தனது கையில் உள்ள காகித அட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக காட்டி, குடும்ப வன்முறையின் கடுமை மற்றும் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.

அந்த அட்டைகளில் சமூகத்தை சிந்திக்க வைக்கும் பல வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.அந்த பதிவில் அவர்,“ஒரு குற்றத்தை பார்த்தும் மௌனமாக இருப்பவன், அதை செய்தவனைப் போலவே குற்றத்தில் பங்காளி” என்பதாகும்.
பல பெண்கள் குடும்ப வன்முறையை எதிர்கொண்டாலும், பயம், குடும்ப அழுத்தம், சமூகத்தின் பார்வை போன்ற காரணங்களால் அதைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாமல் துன்பப்படுகிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.
அப்படிப்பட்ட நேரங்களில், அந்த வன்முறையை கவனிக்கும் நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் அல்லது உறவினர்கள் மௌனமாக இருப்பது அந்த அநீதியை மேலும் தொடரச் செய்கிறது என்றும் அவர் எச்சரித்தார்.
குடும்ப வன்முறை என்பது தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல; அதை பார்த்தும் பேசாமல் இருப்பது கூட ஒரு சமூகப் பொறுப்பின்மையாகும். அதற்கு எதிராக அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என்பதே இந்த வீடியோவின் முக்கிய செய்தி என கோலி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
very wrong remain silent despite witnessing crime Kohli releases awareness video support women