மேகதாது அணை பெரும் ஆபத்து..! திமுக ஏன் விவசாயிகளுக்கு இப்படி துரோகம் செய்கிறது...? -அண்ணாமலை
Mekedatu Dam big danger Why DMK betraying farmers like this Annamalai
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை பொள்ளாச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.அவர் தெரிவிக்கையில்,"ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளைச் சுற்றியுள்ள சர்வதேச பதற்றம் காரணமாக உலகளவில் எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.

அதன் தாக்கமாக, மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து தற்போது ரூ.913 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் எல்.பி.ஜி. இணைப்புகளை 14 கோடியிலிருந்து 33 கோடியாக உயர்த்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
பயன்பாடு அதிகரித்துள்ளதால் இந்தியா தற்போது சுமார் 45 சதவீத எரிவாயுவை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. சர்வதேச சந்தையில் விலை உயர்வதால், சில நேரங்களில் விலை உயர்த்த வேண்டிய சூழ்நிலை தவிர்க்க முடியாததாகிறது என்றும் அவர் விளக்கினார்.
அதே நேரத்தில், தேர்தல் வாக்குறுதியாக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவதாக அறிவித்திருந்த ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அண்ணாமலை வலியுறுத்தினார்.
இதற்கிடையில், கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அரசு மேகதாது அணை திட்டத்திற்கான விரிவான அறிக்கையை சட்டமன்றத்தில் முன்வைத்திருப்பதையும் அவர் விமர்சித்தார்.
இந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் விவசாயத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்தார்.மேலும், காங்கிரஸ் கூட்டணியை கருத்தில் கொண்டு தமிழக அரசு டெல்டா விவசாயிகளின் நலனை புறக்கணிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியான பிறகு இந்த திட்டம் குறித்து பேசப்படுவது, மறைமுக அரசியல் பேச்சுவார்த்தைகள் நடந்ததற்கான சுட்டியாக இருக்கலாம் என்றும் விமர்சித்தார்.வேலைவாய்ப்பு தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆட்சிக்கு வந்தால் 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
English Summary
Mekedatu Dam big danger Why DMK betraying farmers like this Annamalai